RP Films சார்பில், R.P.பாலா தயாரித்து இயக்கியிருக்கும் படம், ‘லவ்’. இதில் பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல் அனி போப், ஸ்வயம் சித்தா, ஆடம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஷைன் டாம் சாக்கோ – ரஜிஷா விஜயன் இணைந்து நடித்த ‘லவ்’ மலையாள படத்தின், மறு உருவாக்கமே, பரத்தின் நடிப்பினில் 50 படமாக வந்திருக்கும் லவ். சைக்காலாஜிக்கல் த்ரில்லர் படமான ‘லவ்’ எப்படி இருக்கிறது.
பரத், வாணி போஜன் இருவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தாலும், வாணிபோஜனின் பெற்றோருக்கு விருப்பமில்லை. இருந்த போதிலும் வாணிபோஜனின் விருப்பத்தின் பேரில் சம்மதிக்கின்றனர்.
திருமணத்திற்கு பிறகு பரத், வாணி போஜன் இருவருக்குள்ளும் சிறு சிறு பிரச்சனைகள் உருவாகி வருகிறது. இதற்கிடையே வாணி போஜன் கர்ப்பமாகிறார். ஆசையுடன் பரத்திடம் தெரிவிக்க அவர் வேண்டா வெறுப்பாக நடந்து கொள்ள, இருவருக்குமிடையே மோதல் உருவாகிறது. மோதலின் உச்சத்தில் பரத் வாணி போஜனை கடுமையாக தாக்கி விடுகிறார். இதனால், சுவற்றில் மோதி உயிரை விடுகிறார், வாணிபோஜன்.
இந்நிலையில் பரத்தின் நண்பர்கள் சிலர், அவரது வீட்டிற்கு வருகின்றனர். பரத் நடந்ததி கூற, வாணிபோஜனில் உடலை அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்குகின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது? எனபது தான், ‘லவ்’ படத்தின் மீதிக்கதை!
லவ், மலையாளப் படம் பார்த்தவர்களுக்கு, தமிழ் லவ் படம் பிடிக்காது! திறமையான நடிகர்கள் இருந்த போதிலும் காட்சிப்படுத்தலில், சுவாரசியமின்றி இருப்பதால் படத்துடன் ஒன்ற முடியவில்லை.
நன்றாக நடிக்கக் கூடிய நடிகர் பரத்திடம் சிறந்த நடிப்பினை கொண்டுவருவதில் தோற்றுப் போயிருக்கிறார், இயக்குநர் R.P.பாலா.
இப்படத்தினை பொறுத்தவரை நடித்த நடிகர்களில், நடிப்பினில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார், விவேக் பிரசன்னா.
வாணிபோஜன், கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை கொடுத்துள்ளார். பாடல் காட்சிகளில் அழகாக இருக்கிறார். எமோஷனல் காட்சிகளிலும் ஒகே!
P.G. முத்தையாவின் ஒளிப்பதிவில் காட்சிகளும், பாடல் காட்சிகளும் அழகாக இருக்கிறது. இவரது ஒளிப்பதிவும், ரோனி ரபேல் இசையும் படத்திற்கான பெரும் பலம்.
கொலை செய்த பரத்தின் முகத்தில் பதட்டமும், பரபரப்பும் மிஸ்ஸானதால்,
‘லவ்’ வும் மிஸ்ஸாகிறது!