குருசரணின் ‘எழுவோம்’ பாடலை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

பிரபல பாடகர் சிக்கில் குருசரண் மற்றும் நண்பர்களின் ‘எழுவோம்’ என்ற பாடலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் 3 டிசம்பர், 2021 அன்று வெளியிட்டார்.

பெயருக்கு ஏற்றார் போல் ஊக்கமளிக்கும் பாடலாக ‘எழுவோம்’ அமைந்துள்ளது. கொரோனாவைரஸ் நெருக்கடியில் இருந்து மீண்டு வர மக்கள் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதைப் பற்றிய பாடல் தான் ‘எழுவோம்’.

அரவிந்தன் ஆர் இயக்கியுள்ள இந்தப் பாடலுக்கு சிக்கில் குருசரண் இசையமைத்து பாடியுள்ளார். ஒளிப்பதிவை வினோத் சௌந்தர் மேற்கொள்ள, படத்தொகுப்பை கவின் ஆதித்யா கையாள பாடல் வரிகளை ராம்நாத் பகவத் எழுதியுள்ளார்.

இந்த பாடலின் வரிகள் உணர்வுபூர்வமாகவும், இசையும் குரலும் உற்சாகமூட்டக்கூடியதாகவும், காட்சி அமைப்பு அனைவரையும் கவரும் வகையிலும் உள்ளன.

தென்னிந்தியாவிற்கான மலேசியா தூதர் கே சரவணன், கேட் சென்டர்  நிர்வாக இயக்குநர் காரையடி செல்வன், லீப் ஸ்போர்ட்ஸ் ஆலோசகர் ரமேஷ் மற்றும் வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா ஆகியோர் முன்னிலையில் இந்த பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

டோக்கியோ தமிழ் சங்கம், ஸ்ருசன் டெக்னாலஜி, இன்னோவேட்டிவ், நிகில் முருகன் மற்றும் லீப் ஸ்போர்ட்ஸ் ஆகியோரின் ஆதரவோடு இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

சிக்கில் குருசரண் பாடிய ‘எழுவோம்’ பாடலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு எம் சுப்பிரமணியன் டிசம்பர் 3-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னையில் உள்ள தி பார்க் விடுதியில் வெளியிட்டார்.