Double Meaning Production சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்துள்ள ‘மாயோன்’ படத்தினை இயக்கியிருக்கிறார், கிஷோர். இதில் சிபிராஜ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.
மாயோன் படத்தின் கதைக்களம் கடவுள் சார்ந்த நம்பிக்கைகள், சிலை கடத்தல், புதையல் வேட்டை, அறிவியல் சார்ந்த விஷயங்களை மய்யமாக கொண்டு ஒரு பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் சிபிராஜ் பேசியதாவது…
நாம் டிவியில் படம் பார்க்கும் போது கொஞ்சம் ரெசல்யூசன் குறைந்தாலே கவலைப்படுவோம். ஆனால் ஒரு சாரார் மொத்தமாகவே படம் பார்க்க முடியாமல் இருக்கிறார்கள் எனும் போது கேட்க கவலையாக இருந்தது. அவர்களுக்கு ஒரு புது முயற்சியாக ஆடியோ விளக்கத்துடன் டீசர் வரும் படத்தில், நான் நாயகனாக நடிப்பது பெருமையாக இருக்கிறது. இதை சாத்தியப்படுத்திய தயாரிப்பாளருக்கு நன்றி. இசைஞானி இளையராஜா இசையில் நடிப்பது கனவு, அது இதில் நடந்துள்ளது. இயக்குநர் கிஷோர் மிக சிறப்பாக கதை செய்திருந்தார். ஆனால் அதை திரையில் ராம் பிராசாத் அட்டகாசமாக கொண்டுவந்துள்ளார். அவர் தெலுங்கில் மிகப்பெரிய படங்கள் செய்துள்ளார். இந்தப்படத்தில் என்னை மிக அழகாக காட்டியுள்ளார். தான்யா மட்டும் தான் நான் நடித்ததில் என் உயரத்திற்கு சரியாக இருந்தவர். அவர் சிறப்பாக நடித்துள்ளார். ராதாரவி சார், ரவிக்குமார் சாருடன் நடித்தது மகிழ்ச்சி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
மாயோன் படம் குறித்து இயக்குநர் கிஷோர் பேசியதாவது…
மாயோன் படத்தின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறேன் என்று சொன்னவுடன் படத்தின் கலர் மாறிவிட்டது. இதில் எல்லா நட்சத்திரங்களும் மிக அற்புதமாக செய்துள்ளார்கள். பாலாவின் ஆர்ட், ராமின் ஒளிப்பதிவு எல்லாமே சூப்பராக வந்துள்ளது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இப்படம் விஷுவலாக சிறப்பான படமாக இருக்கும். இந்தப்படத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இப்படி ஒரு விசயம் செய்த தயாரிப்பாளருக்கு நன்றி. நான் யோசிக்கவே இல்லை ஆனால் அவர் தனது சைக்கோ படத்திலேயே இதை செய்திருந்தார். இப்போது இந்தப்படத்திற்கு இதனை செய்ததற்கு நன்றி. இந்தப்படம் ஒரு புதுமையான படைப்பாக இருக்கும். என்றார்.