மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய சரகத்தில் வசிக்கும், கண் பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுகின்றனர் என்ற தகவலை அறிந்த, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப.அவர்கள் வழிகாட்டுதலின் படி, மேற்கண்ட 21 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியை மேலூர் காவல் ஆய்வாளர், திரு. தெய்வீக பாண்டியன், சார்பு ஆய்வாளர், திரு. பாலமுருகன், திரு சண்முக பாண்டியன்,காவலர்கள் மூலமாக பயனாளிகள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கி உதவி செய்தனர்.