செம பிட்… செம மாஸ்! புதிய தோற்றத்தில் மஞ்சிமா மோகன் கொடுத்த சர்ப்ரைஸ்!

மலையாளத்தில் புகழ்பெற்ற ‘ஒரு வடக்கன் செல்பி’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களையும் கொள்ளையடித்தவர் நடிகை மஞ்சிமா மோகன். அதனைத் தொடர்ந்து ‘எஃப்.ஐ.ஆர்’ (FIR), ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’ மற்றும் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற டிஜிட்டல் தொடரான ‘சுழல் சீசன் 2’ உள்ளிட்ட பல்வேறு மாறுபட்ட வெற்றித் திரைப்படங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தித் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் ஒரு வலுவான மறுபிரவேசத்தை (Re-entry) நிகழ்த்துவதற்காக, அவர் தனது உடல் தோற்றத்தை முற்றிலும் புதியதொரு பொலிவிற்கு மாற்றியமைத்துள்ளார்.  கடினமான உடற்பயிற்சி உத்திகள் மூலம் உடல் எடையை அடியோடு குறைத்து, மிகவும் பொலிவாகவும், கட்டுக்கோப்பாகவும் (Fit & Toned) மாறியுள்ள மஞ்சிமாவின் இந்த அதிரடியான புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்பொழுது சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர்  மத்தியில் ஆச்சரியத்தையும் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.

திரையுலகினரையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ள அவரது இந்த வியத்தகு தோற்ற மாற்றமும், புத்துணர்ச்சியான புதிய கெட்டப்பும், அவர் தற்பொழுது ஒப்பந்தமாகி வரும் அடுத்தடுத்த புதிய திரைப்படங்கள் மற்றும் பிரம்மாண்டப் ப்ராஜெக்டுகள் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.