சேது, சம்ரிதி தாரா ஆகிய இருவரும் நாயகன் நாயகியாக நடித்திருக்க, அவர்களுடன் பி.எல். தேனப்பன், ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி , ரத்ன கலா, சி.எம். பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் ஜெயமோகன். ஏபிஜி ஏழுமலை இயக்கி இருக்கிறார்.
ஒளிப்பதிவு பாலா பழனியப்பன். இசை அமர் கீத் எஸ்.
ஆடு திருடும் ஒரு இளைஞனுக்கும், ஊரால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல் கதையே மையல்.
முதல் காட்சியிலேயே வயதான தம்பதியினர் கொடுரமாக கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளிகளை போலீஸ் தேடி வருகிறது. அந்த இரவு நேரத்தில், ஆடு திருடிய ஒருவனை சிலர் துரத்தி வருகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள திருடன் கிணற்றி குதிக்கிறாரன். இரவு முழுக்க கிணற்றில் கிடக்கும் அவனை, காலையில் ஊரால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் காப்பாற்றுகிறாள். இருவருக்குமிடையே கதல் உருவாகிறது. கொலை செய்யப்பட்டவர்கள் யார்? எதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்? ஆடு திருடனின் காதல் என்ன ஆனது? என்பது தான், மையல் படத்தின் விரிவான கதை.
ஆடு திருடன், மாடசாமி கதாபாத்திரத்தில் சேது நடித்துள்ளார். அவருடைய தோற்றத்திற்கு அந்த கதாபாத்திரம் பொருந்தியிருக்கிறது. காதலியுடன் அவர் திருந்தி வாழ முயற்சிக்கும் போது போலீஸில் சிக்கித்திணருவது பரிதாபத்தினை ஏற்படுத்துகிறது. காதலிக்கு ஏற்பட்ட கொடுமையை அடுத்து போலீஸ் ஸ்டேஷனை சூறையாடும் காட்சியில், ஆக்ரோஷமான சேது கைதட்டல்களை பெறுகிறார். ஆதலியுடன் உருகும் போது ரசிக்க வைக்கிறார்.
மலைக் கிராமத்துப் பெண்ணாகவே காட்சி தருகிறார், சம்ரிதி தாரா. சேதுவை விரும்பும் பெண்ணாக தனது காதலை, பாட்டியிடம் வெளிப்படுத்தும் காட்சிகளும் அவரை ரசிக்கச்செய்கிறது.
அவரது பாட்டி சூனியக்காரியாக நடித்திருக்கும் ரத்ன கலா, தோற்றத்தில் மிரட்டுகிறார்.
பண்ணையாராக பி எல் தேனப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் , சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்டவர்களும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு பாலா பழனியப்பன். இசை அமர்கீத். குறை சொல்லமுடியாத இசையமைப்பு. இவர், இசையமைப்பாளர் சௌந்தர்யனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நல்ல விறுவிறுப்பான த்ரில்லருடன் கூடிய காதல் கதைக்கு அனைத்து அம்சங்களும் இருந்தாலும். அது சலிப்பூட்டும் காட்சியமைப்புக்களால் முடியாமல் போயிருக்கிறது. இயக்குநர் ஏபிஜி ஏழுமலை, கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மையல் – என்பது நிலைத்து நிற்காத, ஒரு மயக்க நிலை. அது கதாபாத்திரங்களின் தன்மைக்கு வெகு பொருத்தமாக இருக்கிறது. அதற்காகவே ‘மையல்’ குழுவினரைப் பாராட்டலாம்.