Natpe Thunai – Review

காரைக்கால் கழிமுக பகுதியில் இருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த அழகான ஹாக்கி பிளேகிரவுண்டை ஆட்டைய போட நினைக்கிறார் ஆளுங்கட்சி அமைச்சர் கரு.பழனியப்பன். இந்த விஷயம் ஹாக்கி கோச் ஹரிஷ் உத்தமனுக்கு தெரிய வருகிறது. காலம் காலமாக காரைக்கால் மக்களின் உணர்வுகளில் ஒன்றிபோய்விட்ட அந்த கிரவுண்டை காப்பாற்ற முடிந்ததா இல்லையா? என்பது தான் ‘நட்பே துணை’.

தன்னுடைய முதல் படமான ‘மீசையை முறுக்கு’ படத்தின் மூலம் டீசன்ட்டான வெற்றியைக் கொடுத்த ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடித்திருக்கிறார் அனகா. பார்த்திபன் தேசிங்கு இயக்கியிருக்கிறார்.

பார்த்து பழக்கப்பட்ட விளையாட்டை சுற்றி நடக்கும் ஊழல் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் படம் துவங்கி முதல் பாதியின் கடைசி 20 நிமிஷம் வரையிலும் சுத்த போர். ஒரே இடத்திலேயே கதை நகராமல் நிற்கிறது. அதன் பிறகு தூங்கிய சில பேருக்கும் முழிப்பு வந்து விடுகிறது. இடை வேளைக்குப் பின்னர் அங்கங்கே தொய்வு ஏற்பட்டாலும் பரவாயில்லை. யூத்ஸோட பல்ஸை சரியா புரிஞ்சு வைத்திருக்கும் இயக்குனர் அவர்களை கவரும் வகையில் ஆதி , அனகா காட்சிகளை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. மேலும் சோஷியல் மீடியா பிரபலங்களை மிகச்சரியாக பயண்படுத்தியிருக்கிறார்கள்.

அமைச்சராக வரும் கரு.பழனியப்பன் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார். அவர் பேசும் டைலாக், பாடி லாங்குவேஜ் அனைத்தும் அப்ளாஸ்களை அள்ளுகிறது. நிகழ் கால அரசியல், பொது சொத்தை ஆட்டையை போடும் விதம்,தேசிய அரசியல்வாதிகளுடன் பேரம் பேசும் விதம், நக்கல் என எல்லாமே சூப்பர்.

அவ்வபோது வரும் பாடல்கள் சற்றே இடைஞ்சலாகத்தான் இருக்கிறது. ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் ஆகியன காட்சிகள் படத்திற்கு பலமாகத்தான் இருக்கிறது.

முதல்பாதியின் சில தேவையில்லாத காட்சிகளையும், பார்த்து பழகிப்போன காட்சிகளையும் தவிர்த்திருந்தால் எல்லோருக்கும் பிடித்திருக்கும்