நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் இருவரும் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர். செய்தி ஊடகங்களில் இதுகுறித்த பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. மொத்த கோலிவுட்டும், ரசிகர்களும் இவர்களுடைய திருமணம் குறித்த தகவலை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் ஜோடியின் திருமண தேதி குறித்த அதிகார பூர்வ தகவல் கிடைத்துள்ளது. அதாவது வரும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் தனது காதலர் விக்னேஷ் சிவனை கரம் பற்றுகிறார், நயன்தாரா. இதற்கான ஏற்பாட்டினை இருவரும் செய்து வருகின்றனர். ஓரிரு நாட்களில் இதுகுறித்த அறிவிப்பினை இருவரும் இணைந்து வெளியிடுகின்றனர்..