நயன்தாரா நடிக்கும்   “நெற்றிக்கண்”  படத்தின் கதை!

Nayanthara’s ‘Netrikann’ Movie story

சமீபகாலமாக தொடர் தோல்விப்படங்களை கொடுத்துவரும் நயன்தாராவின் அடுத்தப் படத்திற்கு ‘நெற்றிக்கண்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை 15.9.2019 நேற்று நடைபெற்றது.

‘நெற்றிக்கண்’ படத்தை இயக்குநர் விக்னேஷ்  சிவன் தன்னுடைய ‘ Rowdy Pictures’ சார்பில் முதல் படமாக  தயாரிக்கிறார். சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் அனைவரின் கவனத்தை ஈர்த்த “அவள்” படத்தை இயக்கிய மிலிந்த் ராவ்  இயக்குகிறார்.

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கயவர்களை கண் தெரியாத நயன்தாரா பழிவாங்குவதே ‘நெற்றிக்கண்’ படத்தின் கதை! என கூறப்படுகிறது. திக்.. திக்.. த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற ‘நெற்றிக்கண்’ , இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் ‘கவிதாலயா’ நிறுவனம் தயாரித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தவித பிரச்சனையுமின்றி  “நெற்றிக்கண்” படத்தலைப்பு  கிடைத்ததில், விக்னேஷ் சிவன் உட்பட  மொத்த படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.

இது பற்றி  இயக்குனரும், ‘Rowdy Pictures’ ன் நிறுவனருமான விக்னேஷ் சிவன் கூறுகையில் …

‘ ‘Rowdy Pictures’ ன் மொத்தப் படக்குழுவும்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் மறைந்த இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்களுக்கும், கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி அவர்களுக்கும் பெரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

நயன்தாராவை “ஐயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது, கவிதாலயா நிறுவனம் என்பதையும் இந்நேரத்தில் நினைவு கூர்ந்து நன்றி கூறுகிறோம். இயக்குநர் மிலிந்த் ராவ்வின் “நெற்றிக்கண்” திரைக்கதை அவரது முந்தைய படமான “அவள்” படத்தினைப் போலவே ஒரு அற்புதமான திரில்லராக அமைந்திருக்கிறது.

“அவள்” படத்தினை போலவே இப்படமும் அனைவரும் விரும்பும் படமாக இருக்கும் என்றார்.