‘நேற்று இந்த நேரம்’ –  விமர்சனம்!

இயக்குனர் சாய் ரோஷன் இயக்கத்தில்வ் ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமைரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த் செல்வா, பாலா உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், நேற்று இந்த நேரம். இப்படத்தினை, Clapin Filmotainment நிறுவனத்தின் சார்பில், கே ஆர் நவீன் குமார் தயாரித்துள்ளார்.

ஷாரிக் ஹாசன், ஹரிதா இருவரும் காதலர்கள். இவர்கள், தங்களது நண்பர்களுடன் ஊட்டிக்கு ஜாலியாக சுற்றுலா செல்கிறார்கள். ஆனால், ஜாலியாக சென்றவர்களிடையே சில மோதல்கள் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஷாரிக் ஹாசன் மர்மமான காணாமல் போகிறார். ஷாரிக் ஹாசனின் நெருங்கிய நண்பர் போலீஸில் புகார் கொடுக்கிறார். போலீஸ் விசாரணை நடத்தி வருகிற சூழலில் புகார் கொடுத்த நண்பரும் காணாமல் போகிறார்.

காணாமல் போன இருவரை குறித்தும் மற்ற நண்பர்களிடம் போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்துகிறது. அவர்களின் நண்பர்கள் ஓவ்வொரு கோணத்தில், அவர்களுக்கு தெரிந்த சம்பவத்தை கூறுகின்றனர். இதன் பிறகு, காணாமல் போனவர்கள் குறித்து தகவல் கிடைத்ததா, இல்லையா? என்பது தான், ‘நேற்று இந்த நேரம்’ படத்தின் கதை.

ஷாரிக் ஹாசன், வில்லத்தனம் கலந்த நாயகன் வேடத்தில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பு, நன்றாகவே அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளது. நாயகியாக நடித்திருக்கும் ஹரிதா மற்றும் நண்பர்களாக நடித்திருக்கும் மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த்,  அரவிந்த்,

நடந்த ஒரு சம்பவத்தினை, அவரவர் பார்வையில் விவரிப்பது குறித்த திரைகதையை திறம்பட கையாண்டிருந்தாலும், காட்சிகளில் புதுமையில்லாதது சோர்வினை ஏற்படுத்துகிறது. ஒரே காட்சியை மறுபடியும் பார்ப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தி விடுகிறது. சைக்கோ கொலையாளியின் காட்சிகள், திகிலூட்டுவதற்கு பதிலாக போரடிக்க வைக்கிறது. படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

விஷாலின் ஒளிப்பதிவும், கெவினின் இசையும் ஓகே!

எடிட்டர், காட்சிகளை கட் & பேஸ்ட் செய்திருப்பது போல் தெரிகிறது.

மொத்தத்தில், ‘நேற்று இந்த நேரம்’ ஏமாற்றம்!