‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ –  (Once Upon A Time In Madras) விமர்சனம்!

Once Upon A Time In Madras

Casting : Bharath, Abirami, Anjali Nair, Thalaivasal Vijay, Rajaji, Kanika, Shan, Kalki, Pavithra Lakshmi, PGS, Arol D.Shankar.

Directed By : Prasad Murugan.

Music By : Jose Franklin.

Produced By : Friday Film Factory – ’Captain’ MP Anand.

பரத், அபிராமி,  தலைவாசல் விஜய், ராஜாஜி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர், கனிகா, ஷான், கல்கி, பி ஜி எஸ்,  அரோல் டி சங்கர்உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’. இப்படத்தினை பிரசாத் முருகன் இயக்கியிருக்கிறார். ‘கேப்டன்’ எம் பி ஆனந்த் தயாரித்திருக்கிறார். இசை, ஜோஸ் பிராங்கிளின். ஒளிப்பதிவு, கே எஸ். காளிதாஸ், கண்ணா ஆர்.

துப்புரவு தொழிலாளியாக பணியாற்றும் அபிராமி, தற்செயலாக கூவம் ஆற்றிலிருந்து ஒரு  கை துப்பாக்கியை கண்டெடுக்கிறார். அந்த துப்பாக்கியால் அவர் ஒரு கொலை செய்கிறார். அதே துப்பாக்கியால் மூன்று கொலைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடக்கிறது. அபிராமி ஏன் கொலை செய்கிறார். மற்ற கொலைகள் எதற்காக நடக்கிறது என்பது தான், ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ திரைப்படத்தின் சுவாரசியமான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பரத், உயிருக்கு போராடும் காதல் மனைவிக்காக அவர் உருகும் காட்சியிலும், மருத்துவ செலவுக்காக ஒவ்வொருவரிடமும் கையேந்தும் நிலையிலும் தன்னுடைய கதாபாத்திரத்தின் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நண்பனின் மனைவி உதவுவது போல் ஆட்டோவை தந்திரமாக அடகு பிடிப்பதை நினைத்து, மனம் கணத்து அவர் சாவியை கொடுக்கும் காட்சியிலும் தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கணவரை இழந்த துப்புரவு தொழிலாளி அபிராமி, தன் ‘திருநங்கை’ மகனை டாக்டராக்க அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சிறப்பு. டாக்டராக்கும் முயற்சியில் கடனாளியாகி விட்ட அவர், கடன்காரர்களிடமிருந்து ஓடி ஒளியும் காட்சியிலும், க்ளைமாக்ஸ் காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கணவராக இருக்க தகுதியில்லாத ஒருவனை கல்யாணம் செய்து கொண்டு, நயவஞ்சகமாக கற்ப்பமாக்கப்படும் அபலை பெண்ணாக அஞ்சலி நாயர். க்ளைமாக்ஸில் வரது நடிப்பு பெண்களிடம் கை தட்டு பெற்றுத்தரும்.

சாதி வெறி தலைக்கேறிய ‘தலைவாசல்’ விஜய், அவரது மகள் பவித்ரா லட்சுமியை கொல்லத்துணியும் கதாபாத்திரம். அப்படியே சாதி வெறிப்பிடித்த மனிதரை கண்முன் நிறுத்துகிறார். அவரது அப்பாவி மகளாக பவித்ரா லட்சுமி சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனம் கவருகிறார்.

இப்படி படத்தில் நடித்த கல்கி, ராஜாஜி, கனிகா, எம்.ஜெகன் கவிராஜ், அரோல் டி.சங்கர், ஷான்,  பி.ஜி.எஸ் என ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் கே.எஸ்.காளிதாஸ் மற்றும் கண்ணா. ஆர் இவர்களின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் இசையும் ஓகே!

எந்தவித தொடர்பும் இல்லாமல் இருக்கும் நான்கு பேர். அவர்களை ஒரு துப்பாக்கி இணைக்கும் வித்தியாசமான கதை. அதை சுவாரசியமான திரைக்கதையோடு, ஜெகன் கவிராஜின் கவனிக்கத்தக்க வசனங்களோடு, கொஞ்சம் அமெச்சூர்த்தனமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ’ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ்’ திரைப்படம் சஸ்பென்ஸ் பிரியர்களுக்கானது.