‘பரிவர்த்தனை’ விமர்சனம்!

பரிவர்த்தனை திரைப்படத்தினை, M S V புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பொறி. செந்தில்வேல் கதை, வசனம் எழுதி தயாரித்திருக்கிறார். வெத்து வேட்டு, தி பெட் ஆகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.

பரிவர்த்தனை படத்தில், ‘நம்ம வீட்டு பொண்ணு’ தொடரின் நாயகன் சுர்ஜித் நாயகனாகவும், ‘ஈரமான ரோஜாவே’ தொடரில் நாயகியாக நடித்து வரும் சுவாதி, நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன், விக்ரம் ஆனந்த், மாஸ்டர் விதுன், சுமேகா, ஹாசினி, ரயில் கார்த்தி, திவ்யா ஸ்ரீதர், பாரதி, மேனகா, சுண்ணாம்பு செந்தில், வெற்றி நிலவன், கார் செல்வா ஆகியோர் நடித்துள்ளனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கல்லூரித் தோழிகளான சுவாதியும், ராஜேஸ்வரியும் சந்திக்கின்றனர். அதில், ஒருவர் கணவனுடன் மனம் ஒத்துப் போகாமல் வாழ்ந்து வருகிறார். இன்னொருவர், திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வாழ்கிறார். பரஸ்பரம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்ட பிறகு, இவர்களது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வே காரணமாக இருக்கிறது. அது என்ன? இவர்களின் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு? என்பது தான், பரிவர்த்தனை.

மோஹித், சினேகா சம்பந்தப்பட்ட பள்ளிப் பருவக் காதல், வலிந்து திணிக்கப்பட்டதாக காட்சிகளாக இருக்கிறது. வழக்கமான எல்லாப் படங்களிலும் பார்த்து பழகிப்போன காட்சிகள், நடிகர்களுக்கு பொருந்தாத உடைகள், விக், மேக் அப் என, எதிலும் நேர்த்தியற்ற தன்மை படத்தின் பலவீனங்களாக இருக்கிறது.

சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரி ஆகியோரின் சம்பந்தப் பட்ட காட்சிகள் சற்று பரவாயில்லை! லெகேஷன்கள் சிறப்பாக இருக்கிறது. சுவாதியின் நடிப்பு மனம் கவர்கிறது.

காதலியை மறக்க முடியாமல் இருக்கும் காதலன், அவளை தேடாமல் இருப்பது ஏன்? போன்ற பல கேள்விகள் எழுகிறது. பல படங்களில் இருந்து உருவப்பட்ட காட்சிகளுடன், அந்த 7 நாட்கள் படத்தின் காட்சியை க்ளைமாக்ஸில் பயண்படுத்தி, ஒரு வழியாக படித்தினை முடிக்கின்றனர்.

பரிவர்த்தனையில் குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை!