‘ஜவான்’ திரைப்படம் இந்திய திரையுலகில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை தகர்த்தெறிந்திருக்கிறது. விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து ஏகோபித்த பாராட்டுகளை பெற்றிருக்கிறது. படத்தின் கதை, புத்திசாலித்தனமான திரைக்கதை, பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஷாருக்கான் -தீபிகா படுகோன் எனும் ஜோடியின் நிரந்தரமான மாயாஜால கெமிஸ்ட்ரி ஆகியவை… அற்புதமான சினிமா அனுபவத்தை வழங்கி இருக்கிறது. இந்த வெற்றி தேரோட்டம் எந்தவித தடையும் இல்லாமல் தொடர்ந்து பயணிக்கிறது.
‘ஜவான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பட்டாசா..’ எனத் தொடங்கும் பாடலுக்கு ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனின் மாயாஜாலம் மிக்க நடனமும், நடிப்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் கூடிய ஆதங்கத்தை அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டின் பொழுதுபோக்கு பாடல்கள் ஒன்றாக அமைந்த இந்தப் பாடல் வரிகளும் ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. அதன் காட்சி அமைப்புகள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த பாடலின் வரிகளை பாடலாசிரியர்கள் விவேக் மற்றும் அறிவு எழுதி இருக்க, பின்னணி பாடகர் நகாஷ் அஜீஸ், அறிவு மற்றும் பின்னணி பாடகி ஜொனிதா காந்தி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இதற்கு அனிருத் இசையமைக்க, ஃபாரா கான் நடனம் அமைத்துள்ளார்.
‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.