‘பேச்சி’அதிரி புதிரி வெற்றி! மகிழ்ச்சியில் படக்குழுவினர்!

‘வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில், கோகுல் பினாய் மற்றும் ‘வெரூஸ்’ புரொடக்ஷன்ஸ் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ராமச்சந்திரன்.பி இயக்கத்தில், பால சரவணன், காயத்ரி சங்கர், தேவ், ப்ரீத்தி நெடுமாறன், ஜனா, முரளி, சீனியம்மாள் (பேச்சி பட்டி), மகேஸ்வரன் கே, நாட்டுராஜா, சாந்திமணி ஆகியோர் நடிப்பில், கடந்த வாரம் வெளிவந்து மெகா வெற்றி பெற்ற படம், பேச்சி.

பேச்சி திரைப்படம் முதலில் குறைந்த எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. அதன் பிறகு, பேச்சி திரைப்படத்திற்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்தது. இதனையொட்டி, தியேட்டர்களின் எண்ணிக்கை பெருகியது. மக்களின் அமோக ஆதரவினால் வசூல் மழை பொழியத் தொடங்கியது. தயாரிப்பு செலவினை விட மும்மடங்கு வசூல் செய்து வரும் நிலையில், மக்களிடையே  பேச்சி படத்திற்கு ஆதரவு தொடர்ந்து வருகிறது இதனால், பேச்சி படக்குழுவினர் மொத்தமும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

பேச்சி திரைப்படத்தினை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியீடு செய்ததுள்ளது!