Petromax Movie Review – குடும்பத்துடன் கூட்டமாக சென்று ரசிக்கலாம்!

Petromax Movie Review

Petromax is a  Tamil language comedy horror film. Directed by Rohin Venkatesan and produced by Passion Studios. The film starring Tamannaah and Yogi Babu, is a remake of the Telugu film Anando Brahma.

பேய்களின் ‘பிராண்ட் அம்பாசிடர்’ ( Brand ambassador ) ஆன தமன்னா நடித்திருக்கும் இன்னொரு பேய்ப் படம் ‘பெட்ரோமாக்ஸ்’.

தமன்னாவுடன், முனீஸ்காந்த், காளி வெங்கட், சத்யன், டிஎஸ்கே, ‘மைனா’ நந்தினி, K. S. G.வெங்கடேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

டாப்சி நடித்து தெலுங்கில் வெளியான ‘அனந்தோ பிரம்மா (Anando Brahma) என்ற படத்தின்  மறுஆக்கம் தான் இந்த ‘பெட்ரோமாக்ஸ்.’ படம்.

‘அதே கண்கள்’  படத்தை இயக்கி பாராட்டுக்களை பெற்ற  ரோஹின் வெங்கடேசன் ‘பெட்ரோமாக்ஸ்’படத்தை இயக்கியிருக்கிறார்.

பெருமழை வெள்ளத்தில் தனது தாய் தந்தையை இழந்த பிரேம் தன்னுடைய பூர்வீக வீட்டை விற்க முயற்சிக்கிறார். வீட்டை வாங்க வரும் அனைவரும் அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்ய சக்தியால் விரட்டப்படுகின்றனர்.

வீட்டை பிரேம் விற்றாரா? அந்த அமானுஷ்ய சக்தி என்ன செய்தது என்பது தான் படத்தின் திரைக்கதையும், க்ளைமாக்ஸூம்.

‘பெட்ரோமாக்ஸ்’ படத்தின் கதை என்னவோ கேட்டு, பார்த்து பழக்கப்பட்ட கதை தான் என்றாலும் அதை சில ட்விஸ்ட்டுக்களுடன் திரைக்கதையாக்கி ரசிக்கும்படி செய்திருக்கிறார் ரோஹின் வெங்கடேசன்.

பேய் இல்லை என்பதை நிரூபிக்க வரும் ‘இதய நோயாளி’ முனீஸ்காந்த், இரவு 9 மணிக்குமேல் போதையில் உலவும் காளி வெங்கெட், காது கேட்காத, மாலைக்கண் நோயாளி சத்யன், சினிமா பைத்தியமாக டி.எஸ்கே ஆகிய நால்வரின் அட்டகாசத்தால் வயிறு குலுங்க சிரிக்க செய்திருக்கிறார்கள்

பிரேம் வீட்டில் பேய்களாக சுற்றித்திரியும்  தமன்னா, ‘பேய்’ கிருஷ்ணன் கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், குழந்தை மோனிகா அவர்களிடம் மாட்டிக்கொண்டு திணறும் காட்சிகள் சூப்பர்.

காளி வெங்கெட் அனைத்துக் காட்சிகளிலும் சிரிப்பூட்டுகிறார். அவருக்கு இந்தப்படத்தின் மூலம் மேலும் ரசிகர்கள் கிடைப்பார்கள்.

படம் முழுவதும் கலகலப்பாக இருக்கிறது.

தமன்னா, ‘பேய்’ கிருஷ்ணன், K. S. G.வெங்கடேஷ் ,குழந்தை மோனிகா சம்பந்தப்பட்ட ஆரம்பக் காட்சிகள் சற்றுத்தொய்வுடனே ஆரம்பிக்கிறது. இடைவேளை வரை பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. அதன் பிறகு தான் அட்டகாச அதிரடிச் சிரிப்பு.

முனீஸ்காந்த், காளிவெங்கட், சத்யன், டி.எஸ்.கே. ஆகியோருடன் யோகிபாபுவும் ,மைனாவும் சேர்ந்து கொண்டு கலக்கியிருக்கிறார்கள். தமன்னா படத்தின் வியாபாரத்திற்கு மட்டுமே உதவியிருக்கிறார். மற்றபடி வந்து போகிறார்.

திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி சுவாரஸ்யப்படுத்தியிருந்தால் சூப்பர் டூப்பர் ஹிட் நிச்சயம்.

கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் படத்தில் ஒரு செட் ப்ராப்பர்ட்டியாக மட்டுமே பயண்பட்டிருக்கிறார். அவரது ஒரே ரியாக்‌ஷன் கடுப்படிக்கிறது.

கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் மனைவியாக வரும் ஸ்ரீஜா ரவி சிலகாட்சியில் தான் வருகிறார். இருந்தாலும் ஒகே குட்!

வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும் என்ற சொலவடைக்கு ஏற்றபடி சிரிப்பதற்கு ஏற்ற படம் ‘பெட்ரோமாக்ஸ்’.

குடும்பத்துடன் கூட்டமாக சென்று ரசிக்கலாம்!