மொட்டை ராஜேந்திரன் ஐஸ்வர்யா தத்தா  நடிக்கும் காமெடி த்ரில்லர் படம் ‘பப்ஜி’

‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (pubg) என்ற படத்தை ‘தாதா87’, ‘,பிட்ரூ’ ஆகிய  படங்களின் இயக்குனர் .விஜய் ஸ்ரீ  இயக்கவுள்ளார்.

‘பொல்லாத உலகில் பயங்கர கேம்(‘ PUBG) என்ற இந்த காமெடி திரில்லர் படத்தில் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினா நடிக்க, அவருடன் மேலும் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பப்ஜிங்குற கதாபாத்திரத்தில் ‘மொட்டை’ ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறார். ஜூலியும் ‘தாதா’ கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

படத்தோட கதையை பற்றி இயக்குனர் கூறுகையில்,

“பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுறாங்க அதுல ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு. அதற்காக என்ன செய்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடக்கிறது, முழுக்க முழுக்க கமெடி த்ரில்லர்ரா உருவாகிக்கிட்டிருக்கிறது என்கிறார். இயக்குனர் விஜய்ஶ்ரீ.