பிரபுதேவா நடிக்கும் முழுநீள ஆக்‌ஷன் படம்!

காமெடி, நடனம் சார்ந்த படங்களில் நடித்து வந்த பிரபுதேவா, தமிழில் முழுநீள ஆக்‌ஷன் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்குகிறார்.

இதில் பிரபுதேவாவுடன் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ரியாஸ் கானின் மகனும் நடிகருமான ஷாரிக் ஹாஸன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை ‘ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட்’ என்ற படத்  தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார்.

பிரபுதேவா நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத  இப்படத்தின் படப்பிடிப்பு  சென்னையில் தொடங்கி, நடைபெற்று வருகிறது.