கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படம் ‘விக்ரம்’. இந்தப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் கமல்ஹாசனுடன் ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிப்பதாக செய்தியகள் வெளி வந்த நிலையில் அவருக்கு பதிலாக பிரபுதேவா கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளது தெரியவந்துள்ளது.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி மாத நடுவினில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
1998 ஆம் ஆண்டு வெளியான ‘காதலா காதலா’ படத்தில் கமல்ஹாசன், பிரபுதேவா இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர். அதன் பிறகு இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைகின்றனர்.