சிவகார்த்திகேயனின் அப்பா, சத்யராஜ். அவர் ஒரு முற்போக்குவாதி. மேலும், தன்னுடைய பிள்ளைகள் வேற்று ஜாதி, மதத்தினரை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் அவரது அப்பாவின் விருப்பத்திற்கேற்ப பிரிட்டனை சேர்ந்த கிறிஸ்துவ பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறார். இதற்கு முதலில் சம்மதம் தெரிவித்த சிவகார்த்திகேயனின் அப்பா சத்யராஜ் பின்னர், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதற்கு அவருடன் சேர்ந்து அந்த ஊரும் எதிருப்பு தெரிவிக்கிறது. அதற்கான காரணம் என்ன? ஏன்? என்பதே ப்ரின்ஸ் படத்தின் கதை ,திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
சிவகார்த்திகேயன் தனது வழக்கமான காமெடிக் காட்சிகளால் ரசிகர்களை கவர்கிறார். ஒரு சில இடங்களில் அந்தக் காமெடி ‘கடி’க்காமெடியாக இருப்பதால் ஒருசிலரால் மட்டுமே அந்த வகையான காட்சிகளை ரசிக்க முடிகிறது.
பள்ளி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், தன்னுடன் பணியாற்றும் பிரிட்டன் நாட்டுப் பெண் மரியாவை காதலிக்க முயற்சிக்கும் காட்சிகளில் கலகல..
சிவகார்த்திகேயனின் அப்பா கதாபத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜூக்கு பதிலாக, அந்தக் கதாபாத்திரத்தில், எம்..எஸ்.பாஸ்கரோ, சிங்கமுத்துவோ நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சத்யராஜூக்கு அந்தகதாபத்திரம் பொருந்தவில்லை!
அவ்வப்போது வந்து கலகலப்பினை ஏற்படுத்துகிறார், பிரேம்ஜி. சிறப்பு தோற்றத்தில் வரும் சூரி, பரவாயில்லை!
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஆனந்த்ராஜ், வரும் காட்சிகளில் எல்லாம் அதிரடி சிரிப்பினை ஏற்படுத்துகிறது..
சிவகார்த்திகேயனின் நண்பர்களாக நடித்திருப்பவர்களால் படத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு சிறப்பு.
தமனின் இசையில் கலர்ஃபுல் பாடல்கள் தாளம் போட வைக்கிறது.
கடிக் காமெடிகளை மட்டுமே நம்பி இயக்குநர் அனுதீப், திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் நகைச்சுவையான நடிப்பு மட்டுமே படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ப்ரின்ஸ்! சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு மட்டுமே விருந்து!