சிறந்த நடிகருக்கான Provoke magazine விருதை பெற்ற ஜி.வி பிரகாஷ்!

ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்ததுடன் ‘நாச்சியார்’ ‘சர்வம் தாளமயம்’ போன்ற வெரைட்டியான படங்களில் நடித்து கோலிவுட்டின் தவிர்க்க முடியாத ஹீரோவாகவும் வளர்ந்துள்ளார் ஜி.வி பிரகாஷ். 10க்கும் மேற்பட்ட படங்களில் நடிப்பதுடன் இசையமைப்பதிலும் பிஸியாக இருந்து வருகிறார்.

ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்ற ‘சர்வம் தாளமயம்’ அந்த வகையில் பல்வேறு விருதுகளை அப்படம் பெற்றுவருகிறது. அதன் தொடர்ச்சியாக அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது.
இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில் இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சர்வம் தாளமயம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராஜீவ்மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். ஜி.வி பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஜி.வி பிரகாஷ் இவ்விருதைப் பெற்றுள்ளதை தெரிந்ததும் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ஜி.வி பிரகாஷுக்கு வாழ்த்துகள் என ட்விட்டரில் தெரிவிக்க உற்சாகமான ஜி.வி, ஏ.ஆர் ரகுமானுக்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார். இந்த விருது வழங்கும் விழா நேற்று இரவு மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.