இயக்குநர்  பிரியதர்ஷன் ஆதரவாக பார்த்துக்கொண்டார் – ரம்யா நம்பீசன்!

திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். விரைவில் வெளியாகவிருக்கும் “நவரசா” ஆந்தாலஜி படத்தில்,  லக்ஷ்மி கதாப்பாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார். மனிதனின் அடிப்படை உணர்வுகளான 9 ரசங்களை மையமாக கொண்டு, தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள  “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.

இப்படத்தில் தனது கதாப்பாத்திரம் குறித்தும்,  இயக்குநர் பிரியதர்ஷன்  அவர்களுடன் பணியாற்றியது குறித்தும்,  நடிகை ரம்யா நம்பீசன் பகிந்துகொண்டதாவது…

எனது கதாப்பாத்திரத்தில் சிறு வயது தோற்றத்திலும், முதிய வயது தோற்றத்திலும் நானே நடிப்பதாக, படைப்பாளிகள் என்னிடம் கூறியபோது, எனக்கு சற்று குழப்பமாக  இருந்தது. முதிய வயது தோற்றத்தை, என்னால் சரியாக செய்ய முடியுமா எனத் தயங்கினேன். இயக்குநர் பிரியதர்ஷன்  அவர்கள் ஒவ்வொரு காட்சியையும் மிகப் பொறுமையாக சொல்லிக்கொடுத்து, படப்பிடிப்பில் மிக ஆதரவாக பார்த்துக்கொண்டார். அவரால் தான் இப்படத்தில் நடிப்பது எளிமையானதாக இருந்தது. மிகப்பெரும் ஆளுமையான இயக்குநர்   பிரியதர்ஷன்  அவர்களுடன் பணியாற்றியது, மறக்க முடியாத, மிகச்சிறந்த அனுபவம் என்றார்.