இந்திய இசைத்துறையில் மிக முக்கியமான இடத்தை வகிக்கும் Lahari Music நிறுவனம். தங்களது ஒவ்வொரு ஆல்பம் வெளியீட்டின் போதும், அதை ரசிகர்களின் மனதிற்கு கொண்டு சென்று தொடர் வெற்றியை பதிவுசெய்து கொண்டிருக்கிறார்கள்.
விஸ்வாசம் போன்ற பெரு வெற்றி பெற்ற ஆல்பம் மற்றும் இந்தியாவே எதிர் நோக்கி காத்திருக்கும் பெரிய படங்களான RRR, KGF: Chapter 2 போன்ற படங்களின் இசை உரிமையை பெற்றிருக்கும் இந்நிறுவனம், இப்போது நடிகர் ஆதி நடித்த, தடகள விளையாட்டு படமான “கிளாப்” திரைப்படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ளது.
இசைஞானி இளையராஜா உடன் இந்த படத்திற்காக இணைவதில், Lahari Music உடைய மொத்த குழுவும் பெரும் உற்சாகத்தில் உள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும்.
தயாரிப்பாளர் Big Print Picture I B கார்த்திகேயன் இது குறித்து கூறியதாவது…
Lahari Music போன்ற பிரபலமான பெரு நிறுவனத்துடன் இணைவது, எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. ஒவ்வொரு ஆல்பத்தையும், பெரும் உழைப்பை செலுத்தி, பெரிய அளவில் அதனை பிரபலமடைய செய்து, இசை உலகில் மிக முக்கியமான இடத்தை தக்கவைத்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, Lahari Music உடன் இணைந்த விஸ்வாசம் போன்ற படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளன.
மேலும் உலகமே எதிர்நோக்கியிருக்கும் RRR, KGF Chapter 2 போன்ற பெரிய திரைப்படங்களும் அவர்களுடன் இணைந்துள்ளன. தற்போது அந்த வரிசையில் “ Clap” திரைப்படமும் இணைவதில் எங்களுக்கு பெருமையே. இப்படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களுடைய மந்திர இசை, இசை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை எற்படுத்தும் என உறுதியாய் நம்புகிறோம் என்றார்.
“கிளாப்” திரைப்படத்தில் நடிகர் ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷ் குருப், பிரகாஷ் ராஜ், நாசர், மைம் கோபி, முனிஷ்காந்த் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். படத்தை எழுதி, இயக்கியுள்ளார் பிரித்வி ஆதித்யா. இப்படத்தை தயாரிப்பாளர் I B கார்த்திகேயன் தயாரிக்கிறார்.
படத்தின் இணை தயாரிப்பாளராக P. பிரபா பிரேம், மனோஜ் மற்றும் ஹர்ஷா பணியாற்றுகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு, பன்மொழி திரைப்படமாக இப்படம் வெளியாகவுள்ளது.