ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘ரெபல்’ பட டீசருக்கு அமோக வரவேற்பு!

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார்  நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா, அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டார். டீசர், வெளியான குறுகிய காலத்திற்குள் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

‘ரெபல்’ திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கி வருகிறார். இதில் , ஜீ. வி. பிரகாஷ் குமாருடன்  மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்க, இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

‘ரெபல்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.