உதயநிதி அலுவலகத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய அருள்நிதி!

நடிகர் அருள்நிதி தொடர்ந்து வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அவர் இன்று தனது பிறந்தநாளை உதயநிதி ஸ்டாலினின்  திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான  ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ அலுவலகத்தில் கொண்டாடினார். இந்நிகழ்ச்சி ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ CEO தமிழ்குமரன் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார். அருள்நிதி நடிப்பில் இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள  “தேஜாவு” திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.