ரெண்டகம் – விமர்சனம்!

ஒரு சில படங்களின் தலைப்பு மட்டுமே அந்தக்கதைக்கு சரியாக பொருந்தும். அப்படித்தான் இந்த ‘ரெண்டகம்’ படத்தின் கதைக்கும் தலைப்பு சரியாக பொருந்தியிருக்கிறது. ‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதே’என ஒரு முதுமொழி இருக்கிறதல்லவா? அது தான் இப்படத்தின் கதை. சர்வதேச ‘டான்’ ஒருவருக்கு அவருடன் இருக்கும் கையாள் துரோகம் செய்கிறான். ஏன், எதற்கு? என்பது தான் ‘ரெண்டகம்’ படத்தின் கதை.

‘ரெண்டகம்’ படத்தின் கதை, திரைக்கதை மொத்தமும் க்ளைமாக்ஸ் வரை யூகிக்க முடியாதபடி படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தனிச்சிறப்பு.

படத்தில் நடித்துள்ள அரவிந்த்சாமி, குஞ்சக்கோ போபன், நரேன், அமல்டா லிஸ், ஜின்ஸ் பாஸ்கர், சியாத் யாது, அனீஷ் கோபால், குமார் கமனன், ஈஷா ரெப்பா. ஒரே சீனில் வந்து கெத்து காட்டிய ஜாக்கி ஷெராப் என படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். ஜாக்கி ஷெராப்பின் காட்சிகள் அடுத்தடுத்த பாகங்களில் இன்னும் எதிர்பார்க்கலாம்!

குஞ்சக்கோ போபன் அரவிந்த்சாமியிடம் சில ரகசியங்களை தெரிந்து கொள்வதற்காக போலியாக பழகி பின்னர் அவரிடம் உண்மையான நட்பு பாராட்டும்போதும். பின்னர் அரவிந்த்சாமியை கொல்ல முயற்சி நடப்பதை அறிந்து, அவர்மீது பரிதாபம் கொள்ளும்போதும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் அரவிந்த்சாமி இருவேறுபட்ட நடிப்பினை கொடுத்து ரசிக்க வைக்கிறார். அவரது இருவேறுபட்ட நடிப்பின் மூலம் படம் பார்ப்பவர்களை அசரடிக்கிறார்.

படத்தை சர்வதேச தரத்திற்கு எடுத்துச்செல்வது ஜாக்கிஷெராஃப் தான் பீச்சில் குளித்துவிட்டு கெத்தாக நடந்து வரும் அவரை பார்க்கும்போது ஹாலிவுட் படத்தினை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

அதேபோல் குஞ்சக்கோ போபனுக்கு அஸைன்மெண்ட் கொடுக்கும் காட்சியில், அமல்டா லிஸ்ஸின் கெத்தான இந்தக்காட்சியும் சர்வதேச தரத்திலான காட்சியமைப்புகள். சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளார்.

சாதரணமாக தொடங்கும் திரைக்கதை, க்ளைமாக்ஸை நெருங்கும்போது  நாம், சீட்டின் நுனிக்கு வந்துவிடுகிறோம். கோவாவில் அரவிந்த் சாமியின் ஃபைட் சூப்பராக இருக்கிறது. ஆனால் க்ளைமாக்ஸில் நடக்கும் ஃபைட் ‘பெப்பே’ படத்திற்கு திருஷ்டி!

கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, இயக்கம் என ஒரு தரமான டான் படம்.!

ரெண்டகம் மூன்று பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்போது வெளியாகியிருப்பது 2 ஆம் பாகம். மற்ற பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

ரெண்டகம் சினிமா ரசிகர்கள் பார்க்கவேண்டிய படம்!