இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான நேரம், பிரேமம் ஆகிய படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது ‘ரோமியோ பிக்சர்ஸ்’ தயாரிப்பில் அவர் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்தப்படம் தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.
அல்போன்ஸ் புத்திரன் புதிய படத்தை இயக்குகிறார், என்ற செய்தி அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்களிடம் அது மிகப்பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.
இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், ரோமியோ பிக்சர்ஸுடன் இணையும் தனது புதிய படத்திற்காக 15 வயதிலிருந்து 55 வயது வரையிலான நடிகர்கள் தேவைப்படுவதாக கொடுக்கப்பட்ட விளம்பரத்தை அடுத்து, ரோமியோ பிக்ச்சர்ஸ் அலுவலகத்தில், 7 நாட்கள் தொடர்ந்து நடக்கும் இந்த ஆடிசனுக்காக நூற்றுக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர்.
இந்த ஆடிசனுடன் படத்தின் முதற்கட்ட தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் ஆரம்பிக்கும் முன்னதாகவே படத்திற்கு நிலவி வரும் இத்தகைய எதிர்பார்ப்பு, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது ரோமியோ பிக்சர்ஸ், இயக்குநர் ராஜுமோகன் இயக்கத்தில் “பாபா பிளாக் ஷீப்” படத்தை தயாரித்து வருகிறது. இப்படம் விரைவில் வெளியாகிறது.