வித்யுத் ஜாம்வாலின் அதிரடி ஆக்‌ஷன் படம் ‘சனக்’,  அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகிறது!

பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் நடித்திருக்கும் ‘சனக்’ ,  பணயக் கைதியை மையப்படுத்திய இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதியன்று பிரத்யேகமாக வெளியாகிறது.

மிகப்பெரிய அதிரடி ஆக்சன் ஹீரோக்களில் ஒருவரான வித்யூத் ஜாம்வால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சனக்’. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியிருக்கிறது. ஹிந்தி திரை உலகில் பணய கைதியை மையப்படுத்திய திரைப்படங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா, ஜீ ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்துடன் இணைந்து ‘சனக்- ஹோப் அண்டர் சீஜ்’  திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.

இப்படத்தின் சண்டைக் காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி, வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாகவும். பணயக் கைதியின் திக் திக் நிமிடங்கள், ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் வரவைக்கும்  என்கிறார், படத்தினை இயக்கியிருக்கும் இயக்குனர் கனிஷ்க் வர்மா.

இந்தப் படத்தில் வித்யூத் ஜாம்வால், பெங்காலி திரை உலகத்தின் முன்னணி நடிகை ருக்மணி மைத்ரா, நடிகை நேகா துபியா மற்றும் சந்தன ராய் சான்யல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ‌

இதுகுறித்து நடிகர் வித்யூத் ஜாம்வால் பேசுகையில், ‘ நீங்கள் படத்தை பார்க்கும் போது உங்களை பற்றிய படைப்பாகவும், உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு உதவி செய்திடும் உத்வேகத்தையும் அளிக்கும். என நான் உறுதியாக கூறுகிறேன்’ என்றார், சுருக்கமாக.

‘சனக் – ஹோப் அண்டர் சீஜ்’,  ஜீ ஸ்டுடியோஸ், சன்ஷைன் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து வழங்குகிறது. இந்த திரைப்படம் அக்டோபர் 15 தேதியன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.