பிரம்மாண்டமாக உருவாகும் சந்தானத்தின் ட்ரிப்பிள் ஆக்‌ஷன் படம்!

‘அறம்’,, ‘குலேபகாவலி’, ‘ஐரா’ ஆகிய படங்களை தயாரித்த கொட்டப்பாடி ஜே.ராஜேஷ் தன்னுடைய ‘கே.ஜே ஆர் ஸ்டியோஸ்’ மற்றும் ‘சோல்ஜர் பேக்டரி’ கே.எஸ். சினிஸும் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். இந்தப்படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கிறார். சயின்ஸ் பிக்‌ஷன் பின்னணியில் முழுக்க முழுக்க காமெடிப்படமாக உருவாகவுள்ள இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார்.

இப்படத்தின் பெயர், மற்ற விபரங்களை வரும் செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு  அறிவிக்கப்பட இருக்கிறது பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.