விநோதய சித்தம், விலங்கு, அயலி போன்ற வித்தியாசமான வெற்றி தொடர்களை, தொடர்ந்து தயாரித்து, வெளியிட்டு வரும் நிறுவனம், ZEE5 ஓடிடி நிறுவனம். இந்நிறுவனத்தின் அடுத்த பெரும் பார்ப்பில் இருந்து வரும் இணையத்தொடர் ‘செங்களம்’.
“செங்களம்” இணையத் தொடரை, Abi & Abi Entertainment PVT LTD சார்பாக அபினேஷ் இளங்கோவன் தயாரித்துள்ள இத்தொடரை இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கியிருக்கிறார்.
‘செங்களம்’ இணையத் தொடரரில் கலையரசன், வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, இவர்களுடன் ஷரத் லோஹிதாஸ்வா, விஜி சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், மானஷா ராதாகிருஷ்ணன், வேலா ராமமூர்த்தி, பக்ஸ், முத்துக்குமார், டேனியல் அன்னி போப், அர்ஜய், பவன், பிரேம், கஜராஜ், பூஜா வைத்தியநாதன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
செங்களம், ஒரு பொலிடிக்கல் ட்ராமா த்ரில்லர். டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடருக்கு பின்னணி இசையமைத்துள்ள, தரணின் இசை தொடருக்கான வெற்றியை உறுதி செய்வது போல் இருக்கிறது.
செங்களம் குறித்து இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசியதாவது…
செங்களம் தொடர் ஒரு பரபரப்பான பொலிடிகல் த்ரில்லர். தமிழ்நாட்டின் 30 வருட அரசியலை உங்கள் கண் முன் கொண்டுவரும். உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் தரும். இதில் இடம் பெறும் வசனங்கள் நீங்கள் பார்த்த, கேட்ட அரசியல் வாதிகளை நினைவு படுத்தும். அரசியலில் இருக்கும் துரோகம், வலி அனைத்தையும் சொல்லும். அனைத்து அரசியல் கூத்தையும் அப்பட்டமாக சொல்லும் தொடர்.
கலையரசன் எந்த கதாபாத்திரம் தந்தாலும் அசத்தக்கூடியவர் இதிலும் அட்டகாசமாக நடித்துள்ளார். வாணி போஜன் ‘சூரியகலா’ என்ற கதாபாத்திரத்தில் மிக நல்ல நடிப்பைத் தந்துள்ளார். விஜி மேடம், ஷாலி, கண்ணன் என எல்லோருமே கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள். என் ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் இருவருமே எனக்கு மிகப்பெரும் பலம். என்றார்.
ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் வரும் மார்ச் 24 ம் தேதி வெளியாகவுள்ளது.