ஷாருக்கானின் ‘ஜவான்’ 129.6 கோடி  வசூலித்து உலக அளவில் சாதனை!

ஷாருக்கானின் நடிப்பில் தயாராகி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமான ஜவான், உண்மையில் ஒரு திருவிழாவாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டை திரையரங்குகளுக்கு வெளியே பலத்த ஆரவாரம் மற்றும் நடனத்துடன் மைதானங்களைப் போல் மாற்றி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆக்சன் என்டர்டெய்னருக்கு இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத வகையில் ஷாருக் கானின் மேஜிக் பார்வையாளர்களின் இதயங்களை வென்றிருக்கிறது. இதன் விளைவாக ‘ஜவான்’ வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாயை வசூல் செய்து, புதிய சாதனையை படைத்தது. இதன் மூலம் உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸில் ஷாருக்கான் மீண்டும் கால் பதித்துள்ளார்.

ஷாருக்கான் – ரசிகர்களின் மற்றும் பார்வையாளர்களின் இதயங்களை வென்று, பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைப்பார் என்பது ஜவான் படத்திற்கான முன்பதிவு மூலமே தெரிய வந்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என முன்பே கணிக்கப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே ‘ஜவான்’ அனைவரின் கணிப்புக்கும் அப்பாற்பட்டு 129.6 கோடி ரூபாய் வசூலித்து உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் அற்புதமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுவரை எந்த இந்திய படத்திற்கும் கிடைக்காத மிகப்பெரிய ஓப்பனிங் …இந்த ஜவான் படத்திற்கு கிடைத்திருக்கிறது. மேலும் இந்தி திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையும் ஜவான் பதிவு செய்துள்ளது.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கிறது.