அபலைப் பெண்ணின் மூலம் சமூகத்தைச் சாடும்! குறும்பட இயக்குனர் ‘கோடங்கி’ ஆபிரகாம்

தினத்தந்தி, தினமலர், தினகரன், கதிரவன் உள்ளிட்ட பல நாளிதழ்களில் செய்தியாளராக இருந்தவர், ஆபிரகாம் லிங்கன். தற்போது ‘கோடங்கி’ என்ற பெயரில் தொலைக்காட்சி, இணையதளங்களில்  செய்தியாளராக இருந்து வருகிறார்.

ஆபிரகாம் லிங்கன் தமிழகத்தின் மாபெரும் அரசியல், சமூகநீதி காப்பாளர் ‘தெய்வத் திருமகனார்’ பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை நினைவு கூறும் வகையில் ‘பசும்பொன் தேவர் வரலாறு’ என்ற குறும்படத்தை ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்க, இவர் இயக்கினார். இந்த குறும்படம் அனைவரிடமும் வரவேற்பை பெற்றது.

தற்போது சந்தர்ப்ப சூழல் காரணமாக அவலமான தொழிலில் சிக்கும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை மைய்யப்படுத்தி ஆபிரகாம் லிங்கன் ஒரு குறும்படத்தை எழுதி, இயக்கி வருகிறார். இக்குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினத்தில் ரிலீசாகிறது.

கதையின் நாயகியாக கயல்விழி நடிக்க அவருடன் ஜோயல் பென்னட், ‘திடீர் தளபதி’ சதீஷ்முத்து, ஹிதயத்துல்லா, ‘ஒற்றன்’ துரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: அனிஷ் ஆஞ்சோ ,இசை: விசு, விளம்பர வடிவமைப்பு: SMB கிரியேஷன் மணிபாரதி செல்வராஜ், செய்தி தொடர்பு: யுவராஜ்.

‘ருச்சி சினிமாஸ்’ & ‘பாஸ்ட் மெஸெஞ்சர்’ இணைந்து வழங்க P.சுமித்ரா தயாரித்து உள்ளனர்.