ரஜினிகாந்திற்கு திடீர் உடல் நலக்குறைவு! அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதி!

நடிகர் ரஜினிகாந்த அப்பல்லோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார்!

நடிகர் ரஜினிகந்த் ஹைதராபாத் அப்பல்லோ ஹாஸ்பிடலில் ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரித்து  வரும் ‘அண்ணத்த’ படத்தின் இறுதி கட்டப்படபிடிப்பில் நடத்து வந்தார்.

இந்நிலையில் அண்ணத்த படத்தில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் உதவியாளர் உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு அனைவரும் தனிமை படத்தப்பட்டனர்.

படத்தில் நடித்த வந்த ரஜினிகாந்திற்கு  கொரொனா சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பிலிருந்ததால்  தனிமை படுத்திகொள்ள அறிவுறுத்தபட்டதின் பேரின் அவர் தன்னை தனிமை படுத்திக்கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை ரஜினிகாந்த் உடலில் ஏற்பட்ட கடும் ரத்த அழுத்த மாறுபாட்டால் அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு தீவிர தொடர் சிகிச்சையினால் தற்போது நலமுடன் இருக்கிறார்.

இருப்பினும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சில தினங்கள் மருத்துவர்களின் கண்கானிப்பில் இருப்பார் என தெரிய வருகிறது.