இயற்கை, ஈ, பேராண்மை போன்ற சமூக நலன் சார்ந்த படங்களை இயக்கியவர், எஸ். பி.ஜனநாதன். தற்போது விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் ‘லாபம்’ படத்தை இயக்கிவருகிறார்.
‘லாபம்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்தப் படத்தின் எடிட்டிங் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. வழக்கம்போல் மார்ச் 12 ஆம் தேதி, இயக்குனர் எஸ். பி.ஜனநாதன் எடிட்டிங்கில் ஈடுபாட்டிருந்தார்.
மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்ற எஸ். பி.ஜனநாதன் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்கு சென்றனர். அங்கே சுயநினைவை இழந்தநிலையில் அசைவற்று கிடந்த எஸ். பி.ஜனநாதனை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிக்கிச்சை அளிக்கப்பட்ட போதிலும் மருத்துவர்களால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் இன்று மார்ச் 14 ஆம் தேதி காலை 10.00 -க்கு எஸ். பி.ஜனநாதன் இயற்கை எய்தினார். என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.
எஸ். பி.ஜனநாதன் அனைவரிடமும் அன்பாக பழகி, எளிதில் நண்பராகி விடுவார். பொதுவுடைமை தத்துவத்தில் நிபுனத்துவம் பெற்ற அவர் மறைந்தது திரைத்துறைக்கு இழப்பே!!!
மக்கள் , திரைத்துறையினர் எஸ். பி.ஜனநாதனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படுகிறது.
செவ்வணக்கங்கள் தோழர்.