ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியா பிரியங்கா திம்மேஷ் நடித்துள்ளார் , ஹரிஷ் பேராடி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜுபின் இசைக்கு பிரபல பாடலாசிரியர் விவேகா பாடல்களை எழுதியுள்ளார். ஒளிப்பதிவு – யுவராஜ் .M, படத்தொகுப்பு : மதன்.G. நடன இயக்குனர் தினேஷ் நடன அமைப்பை பொறுப்பேற்க, ‘மிராக்கிள்’ மைக்கேல் சண்டை பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். பின்னணி பாடல்களை ஆண்ட்ரியா, M.M.மானசி, ஜித்தின் ராஜ் மற்றும் ரவி.G பாடியுள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – ராஜ் தேவ். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் உலகத் திரைப்பட விழாவில் பத்து விருதுகளுக்கு மேல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ஆனந்த விகடன் மற்றும் சாவி இதழ்களில் சிறுகதைகள் எழுதியுள்ளார். மேலும் அவர் அமெரிக்காவில் நடைபெற்ற திரைக்கதை போட்டியில் அனைத்து நாடுகளும் கலந்து கொண்ட நிலையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கதைகளான ‘KISS DEATH மற்றும் A STRANGER IS WALKING BY’ஆகியவற்றிற்கு சொந்தக்காரர் ஆவார்.
அவை இரண்டும் அமெரிக்காவில் அச்சிடப்பட்டு வெளியானதோடு இணையத்தின் KINDLE லும் பதிவேற்றப்பற்றுள்ளது.
படம் பற்றி இயக்குனர் ராஜ் தேவ் பேசியதாவது….
காதலும் சஸ்பென்ஸ் கூடிய ஒரு திரில்லர் ஆகும். இது எதிர்பாராத திருப்புமுனைகளுடன் பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக புனையப்பட்டது. இப்படத்தின் கதாநாயகன் ஸ்ரீகாந்த் இதுவரை ஏற்றிராத புது விதமான கதாபாத்திரத்தில் ஒரு வித்தியாசமான அணுகு முறையில் நடித்த படம. ஸ்ரீகாந்த் மற்றும் ஹீரோயின் பிரியங்கா திம்மேஷ் இருவரும் நடிக்கும் காட்சிகளில் பார்வையாளர்கள் முழுவதுமாக ஈர்க்கப்படுவார்கள். நடிகர் ஹரிஷ் பேராடி அவர்கள் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். சரிகமா ஆடியோவில் வெளியாகிய இத் திரைப்படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.