ஸ்ரீகாந்த், தினேஷ் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’

Srikanth, Dinesh to team up for ‘Sambavam’

‘மைனா’, ‘சாட்டை’,’ மொசக்குட்டி’,’ சவுகார்பேட்டை’, ‘பொட்டு’ ஆகிய படங்களை தயாரித்த ‘ஷாலோம் ஸ்டூடியோஸ்’ ஜான் மேக்ஸ் அடுத்ததாக “சம்பவம்”  என்ற  ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார்.

‘சம்பவம்’ ஶ்ரீகாந்துடன் ‘ஒரு குப்பைக்கதை’ படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவரின் பாராட்டைப்பெற்ற டான்ஸ் மாஸ்டர் தினேஷ் இணைந்து நடிக்கிறார்.

நாயகிகளாக பூர்ணா, சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். இவர்களுடன், ‘பக்ரீத்’ படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல நடிகர்கள் நடிகைகள் பங்கு பெறுகின்றனர்.

நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார்

‘சம்பவம்’ படத்திற்கு அம்ரிஷ் இசையமைக்க: ஒளிப்பதிவு செய்கிறார் முத்து கே.குமரன், ‘அலிபாபா’ படத்தின் மூலம் பாராட்டைப்பெற்ற இயக்குனர் நீலன் கே.சேகர் வசனம் எழுதியுள்ளார்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.