சூர்யாவா , சூரியா யாரை இயக்கப்போகிறார் வெற்றிமாறன்?

Vetrimaran and Surya team up for new film

‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து தணுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ‘அசுரன்’ ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இன்றுவரை அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார். வடசென்னை 2, மற்றும் சூரியுடன் ஒரு படத்திற்கான வேலைகளும் மும்மரமாக நடந்து வருகிறது.

‘இறுதிச் சுற்று’ சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா படத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக இருந்தது.

ஆனால் ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குவதால் சூர்யா படம் தள்ளிப்போகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘2D Entertainment’ தரப்பிலிருந்து வெற்றிமாறனை அனுகியுள்ளனர். அதாவது சூர்யா நடித்து வெற்றிமாறன் இயக்க ஒரு புதிய படத்தை தயாரிப்பதற்கு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்து முடிந்தால் சூர்யா – வெற்றிமாறன் என்ற புதிய கூட்டணி உருவாகும்றிமாறனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடதக்கது.

வெற்றிமாறன் தரப்பிலிருந்து முன்பே திட்டமிட்டிருந்தபடி சூரி நடிக்கும் படத்தை முடித்துவிட்டுத்தான் சூர்யா படத்தை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.