சிலம்பரசனிடம் கட்டிப்புரண்டு நெருக்கம் காட்டிய ஹன்ஸிகா மோத்வானி!

Etcetera Entertainment’ மற்றும் ‘மாலிக் ஸ்ட்ரீம்ஸ்’ இனைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘மஹா’.        டி.ஆர். சிலம்பரசனுடன் இணைந்து நடித்திருக்கும் ஹன்சிகா மோத்வானி  தான் கதையின் நாயகி. பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் இடம்பெறும் ‘கெடுத்துட்டியே.. என்ன கெடுத்துட்டியே’ எனும் பாடலுக்கு சிலம்பரசனிடம் ஹன்ஸிகா மிகவும் நெருக்கம் காட்டி நடித்துள்ளார். இன்று வெளியான இப்பாடல் யுடியூபில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.

மாநாடு படத்தில் ‘அப்துல் காலிக்’ ஆக வந்த சிலம்பரசன், மஹா படத்தில் ‘மாலிக்’ எனும் ஸ்டைலிஷான பைலட் கதாபாத்திரத்தில் வருகிறார். வழக்கமாக சிலம்பரசன் படம் என்றாலே காதல் பஞ்சுக்களும், அடிதடியும் கண்டிப்பாக இருக்கும்.. அப்படித்தான் இந்தப்படத்திலும் இருக்கிறதாம். மாநாடு படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு வருவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதை உறுதிபடுத்தும் வகையில் காதல், அடிதடி, சென்டிமென்ட் என அனைத்து காட்சிகளும் இடம்பெறுவதாக கூறுகிறார்கள்.

மேலும் தம்பிராமையா, கருணாகரன், பேபி மானஸ்வி  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர்  U.R.  ஜமீல் இயக்கியிருக்கும் இப்படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகிறது.