“டாணா”படம் வைபவ் வை காப்பாற்றுமா?

திறமைகள் இருந்தும் கோலிவுட்டில் இன்னும் உயரத்தை தொட முடியாத இடத்தில் இருக்கும் நடிகர்களில் வைபவ்வும் ஒருவர். தொடர் முயற்சிகள் செய்தும் வெற்றியை பெறமுடியாமல் இருக்கிறார்.

யுவராஜ் சுப்ரமணி இயக்கி, வைபவ் நடித்து விரைவில் வெளிவரவுள்ள படம் “டாணா”.
சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட “டாணா”படத்தின் டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இது படக்குழுவினரிடையே உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனால் இப்படத்தின் மூலம் வைபவ்விற்கு பெரிய வெற்றி கிடைக்கும் என படக்குழுவினர்கள் நம்புகிறாரார்களாம்.

முழுபடமும் மோதல், காதல், காமெடி என அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அதன் திரைக்கதை அமைக்கபட்டுள்ளதாம். வைபவ், யோகிபாபுவின் ஒன் லைன் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்குமாம். இப்படத்தில் நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்க, பாண்டியராஜன், உமா பத்மநாபன் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.