பார்த்திபன் உதவியாளர் இயக்குனராக அறிமுகமாகும் ‘பிரம்மபுரி’ மர்மப் படம்!

இயக்குனர், நடிகரான பார்த்திபனிடம் உதவியாளராக பணிபுரிந்த கிரண் மோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘பிரம்மபுரி. இந்தப்படத்தை எபின் கொட்ட நாடன் ‘369 பிலிம்ஸ்’ சார்பில் தயாரித்துள்ளார். அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘பிரம்மபுரி’ படம் குறித்து’ இயக்குனர் கிரண் மோகன் கூறியதாவது..

‘பல நூற்றாண்டுகளாக “பிரம்மபுரி” என்ற காணாமல் போன நகரை தேடி வந்த தகவல் இந்த நூற்றாண்டில் ஒரு குழுவிற்கு தெரிய வருகிறது. அந்த நகரில் மிகப் பெரிய வைரப் புதையல் இருப்பதாக கேள்விப்பட்ட அந்த குழுவினர் அந்த நகரையும், புதையலையும் தேடிப் புறப்படுகின்றனர்.

அந்த குழுவினர் சந்திக்கும் திடுக்கிடும் சம்பவங்களும், பல அமானுஷ்யமான நிகழ்வுகளும் அவர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை உண்டாக்குகிறது. இதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? மாண்டார்களா? என்பதை திரில்லாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறேன்.
அமெரிக்காவில் பெரும் பகுதி படம் படமாக்கப்பட்டுள்ளதுடன் இந்தியாவில் தமிழ்நாடு – கேரளா-கர்நாடக வனப் பகுதிகளிலும் படம்பிடிக்கப்பட்டுள்ளது.” என்றார்.’ இயக்குனர் கிரண் மோகன்.
இதில், ஜெர்மனியை சேர்ந்த மாடல் அழகி மார்ஷா, மிதுனா, ராம்சுபீன் ஜோஸ், பவானி அம்மா, கௌதம், ‘மலேசியாவை சேர்ந்த ‘அஜித் ஆகியோருடன் மேலும் பலரும் நடித்துள்ளனர்.