தணிக்கைக் குழுவின் பாராட்டுடன் ‘A’ சான்றிதழ் பெற்ற ‘வெகுளி’
Guinness Director’s ‘Veguli’ Gets 'A' Certificate
சமீபத்தில் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய ஒரு கொடூரமான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, புதுமையான திரைக்கதையுடன் செதுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘வெகுளி’ (Veguli). கின்னஸ் சாதனை இயக்குநர் இசாக் இயக்கத்தில், பாடலாசிரியர் பிரியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படத்தைப் பார்த்த மத்தியத் தணிக்கைக் குழுவினர் படக்குழுவினரைப் பெரிதும் பாராட்டியுள்ளனர். படத்தின் அதிர்வூட்டும் கதைக் களத்தின் தீவிரத் தன்மை மாறாமல் இருக்க, வெறும் 13 நொடிகள் மட்டுமே தணிக்கை செய்யப்பட்டு படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படத்தில் பிரபல நடிகர் பாய்ஸ் மணிகண்டன் தனது திரைப்பயணத்தில் முதன்முறையாக மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரைக்குத் திரும்பியுள்ள நகைச்சுவை நடிகர் சாப்ளின் பாலு ஒரு மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர் இமான் அண்ணாச்சி முதன்முறையாக ஒரு இஸ்லாமியர் கதாபாத்திரத்திலும், பூவையார் கதையின் போக்கையே மாற்றும் ஒரு வலுவான பாத்திரத்திலும், நடிகர் டேனி காவல்துறையிடம் சிக்கித் தவிக்கும் ஒரு விசித்திரமான கதாபாத்திரத்திலும் தங்களது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அண்மையில் வெளியான இத்திரைப்படத்தின் மிரட்டலான டீசர் மற்றும் பாடல்கள் சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், இப்படத்தின் பிரத்யேகக் காட்சிகளைப் பார்த்த முன்னணித் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இயக்குநரின் துணிச்சலான சமூகப் பதிவையும் விறுவிறுப்பான மேக்கிங்கையும் பாராட்டியுள்ளனர். பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத திருப்பங்கள், கூர்மையான வசனங்கள் மற்றும் சிறந்த பின்னணி இசையுடன் உருவாகியுள்ள ‘வெகுளி’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு சிறந்த கிரைம் த்ரில்லர் விருந்தாக அமையும் என இயக்குநர் இசாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.