சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தங்கலான்’. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பினை கொண்டாடும் விதத்தில்,’தங்கலான்’ படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர்கள் , அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள கலையரங்கில், 500-க்கும் மேற்பட்டவர்களை சீயான் விக்ரம் வரவேற்று, அவரே உணவினை பரிமாறினார். அதன் பின்னர், வந்திருந்த அனைவரும் சீயான் விக்ரமுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
சீயான் விக்ரமுடன் ‘தங்கலான்’ படத்தில் நடித்த நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி, நடிகர் பசுபதி, படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் திருமதி. நேகா ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தந்தை கே. ஈஸ்வரன், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்ஜெயன், இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.