தேர்தல் ஆணையம் 50 நாள் வேலைத்திட்டம் வழங்க வேண்டும் – தங்கர் பச்சான்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. என பெருமிதம் கொள்வதோடு சரி.

பாராளுமன்றம், சட்டமன்றங்களுக்கு நடக்கும் ஒவ்வொரு முறையும் வாக்கு செலுத்துபவர்களின் சதவிகதம் சராசரியாக 50 முதல் 70 சதவிகிதம் மட்டுமே.

இதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து ஒவ்வொரு முறையும் பல ஆயிரம் கோடிகள் செலவிடப்படுகிறது. தமிழகத்தில் கடந்த முறை நடந்த 16 வது சட்டமன்ற தேர்தலுக்கு மட்டும் சுமார் 200 கோடிகள் செலவிடபட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் கணக்கில் வராமல் பல்லாயிரம் கோடிகள் வாக்காளர்களின் வாக்குகளை பெறுவதற்காக வேட்பாளர்களால் செலவிடப்படுகிறது. இது ஒரு புறமிருக்க.

தேர்தல் அறிவித்தவுடன் மக்களை கவர்வதற்காக அரசியல்வாதிகளுக்கு மக்களின் மேல் புதிய பாசம் வந்து விடும். தோசை சுட்டுக்கொடுப்பது, துணி துவைத்துக்கொடுப்பது, காய்கறி விற்பது, விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது என இவர்களின் கூத்து நடக்கும்.

ஆனால் ஏப்ரல் 6 ஆம் தேதியோடு அரசியல்வாதிகளுக்கு மக்களின் மேல் உள்ள பாசம் தீர்ந்துவிடும்! அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது மீண்டும் அடக்கி வைத்திருக்கும் பாசத்தை பொழியத்தொடங்குவார்கள்!

தேர்தல் விதிகளை மீறியவர்கள் மீது தேர்தல் ஆணையம் ஒவ்வொரு முறையும் வழக்குகளை பதிவு செய்து கொண்டே இருக்கின்றது.

ஆனால் இதன் மூலம் தண்டனை பெற்றவர்களோ பதவி இழந்தவர்களோ யாராவது இருக்கின்றார்களா! என்றால் இல்லை.

இப்போது தேர்தல் என்பது மக்களுக்கும் வருமானம் தரும் ஒரு தொழிலாக மாறிவிட்டது.

இந்தத் தேர்தல் வெறும் 30 நாட்கள் வேலைத்திட்டத்தைத்தான் வழங்கியது.

தேர்தல் ஆணையம் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பை சிறிது  முன்கூட்டியே அறிவித்து 50 நாள் வேலைத்திட்டமாக வழங்கினால் பாவப்பட்ட மக்களுக்கு பேருதவியாக இருக்கும்!

இவ்வாறு திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், நடிகர், சூழலியல் செயல்பாட்டாளர் ஆன தங்கர் பச்சான், தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

#KnowYourCandidate!

ஒவ்வொரு வாக்காளரும்  வாக்களிக்கச் செல்லும் முன் கட்டாயம் இந்த செயலியைப் பயன்படுத்தி வேட்பாளர்களின் விவரங்களைத் தெரிந்து கொண்டபின் வாக்களியுங்கள்.

உங்கள் தொகுதி வேட்பாளர், கட்சி,  சின்னம்,  சுயவிவரம்,  வருமானம், சொத்து விவரங்கள், குற்றப்பின்னணி, வழக்கு விவரங்கள், இவை அனைத்தும் ஒரே நொடியில் உங்கள் கைகளில்..

Download at

http://bit.ly/Arappor_android_app

To Know Your Constituency, Candidate, Political Party, Symbol, Personal Details, Income, Assets, Criminality, Cases all in your hands in a second..

#KnowYourCandidate!