‘கஜா’ புயல் இன்றிரவு கடலூர் கரையை கடக்கும்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல், பாம்பன் மற்றும் கடலூர் இடையே, இன்றிரவு 8 மணியிலிருந்து 11 மணிக்குள் கரையை கடக்கிறது. இதனால் மணிக்கு 90 முதல் 130 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

‘கஜா’ புயலால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களான நாகை, கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். எனவே பொதுமக்கள் இரவு 8 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புயல் பாதிப்புள்ள மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.