நானியின் ‘தி பாரடைஸ்’ அப்டேட்!

'The Paradise' Focuses On Emotional Mother-Son Bond Wrapped In Gritty 1980s Action!

‘தசரா’ திரைப்படத்தின்  மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியில் மீண்டும் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘தி பாரடைஸ்’ (The Paradise) வரும் செப்டம்பர் 24 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெற்ற உத்தியோகபூர்வ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் நானி கலந்துகொண்டு, படத்தின் உருவாக்கம் மற்றும் அதன் பின்னணி குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘தி பாரடைஸ்’ படம் குறித்து பேசிய நடிகர் நானி,

‘தி பாரடைஸ்’ திரைப்படத்திற்குத் திரையரங்கு வெளியீட்டிற்கு முன்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ ட்ரெய்லரும் வெளியாகாது. என்ற அதிரடி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், விளம்பரத்திற்கான ட்ரெய்லரை உருவாக்குவதில் நேரத்தைச் செலவிடுவதை விட, படத்தின் இறுதி கட்டப் பணிகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், இத்திரைப்படம் வெறும் ரத்தமும் வன்முறையும் நிறைந்த ஒரு சாதாரண ஆக்ஷன் டிராமா மட்டுமல்ல என்பதைத் தெளிவுபடுத்திய நானி, இதன் மையக்கதை தாய் மற்றும் மகனுக்கு இடையே உள்ள ஆழமான மற்றும் உணர்வுப்பூர்வமான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டது என்று கூறிய அவர்,  1980-களின் செகந்திராபாத் பின்னணியில் நசுக்கப்பட்ட ஒரு விளிம்புநிலை சமூகத்தின் உரிமைகளுக்கான போராட்டமாக உருவாகியுள்ள இப்படத்தில்

18 ஆண்டுகாலத் திரையுலகப் பயணத்திலேயே ‘ஜடால் ஜமனா’ என்ற கதாபாத்திரம் தனக்கு பெரும் சவாலானதாக விளங்கியதாக குறிப்பிட்டார் .

மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளுடன் சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, காயடு லோஹர் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு மாபெரும் தியேட்டர் அனுபவமாக இருக்கும் என்று கூறினார்.