கோமா நிலையில் இருக்கும் நடிகர் வேணு அரவிந்துக்கு தீவிர சிகிச்சை!

சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அவருக்கு மூளையில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை நடந்தது. இதன் பின்னர் நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் நடிகர் வேணு அரவிந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இயக்குநர் கே.பாலச்சந்தரால் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் வேணு அரவிந்த். அவரது இயக்கத்தில் ‘காதல் பகடை’, ‘காசளவு நேசம்’ உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

ராதிகா தயாரிப்பில் உருவான ‘செல்வி’, ‘வாணி ராணி’, ஆகிய சீரியல்களில் முக்கியக் கதாபாத்திரங்களிலும் அலைபாயுதே, வல்லவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் வேணு அரவிந்த்.

வேணு அரவிந்த். ’சபாஷ் சரியான போட்டி’ என்ற படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடதக்கது.