ட்ரிப் – விமர்சனம்

ட்ரிப் – விமர்சனம் ( விளம்பரம் அல்ல )

ட்ரிப் படத்தில் சுனைனா, யோகி பாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், ஜெனிஃபர், அதுல்ய சந்திரா, கல்லூரி வினோத், வி.ஜே. சித்து, பிரவீண் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

எழுதி இயக்கியிருக்கிறார் டென்னிஸ் மஞ்சுநாத்.  ஒளிப்பதிவு செய்துள்ளார், உதயசங்கர். சித்துகுமார் இசையமைத்துள்ளார்.

அந்தமானின் தீவுக்கூட்டங்களில் ஒன்றான சென்டினல் தீவில் வசிக்கும் பழங்குடியினரை பற்றிய முன்னுரையுடன் படம் தொடங்குகிறது. அது படத்தின் மீதான ஏதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.

சுனைனாவும் அவரது நண்பர்களும் ஒரு காட்டுப்பகுதிக்குள் ஜாலி சுற்றுலா செல்கின்றனர். அதே சமயத்தில் யோகிபாபு, கருணாகரன் இருவரும் காட்டின் நடுவே இருக்கும் வீட்டிற்கு செல்கின்றனர்.

இவர்கள் அனைவரும்  ஒவ்வொருவராக கொடுரமாக கொலை செய்யப்படுகிறார்கள். ஏன், எதற்கு? என்பதுதான் ‘ட்ரிப்’ படத்தின் கதை திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

சுனைனாவின் கவர்ச்சியையும், யோகி பாபு – கருணாகரன் கூட்டணியினரின் காமெடியையும் வைத்து ஒரு த்ரில்லான படத்தை கொடுக்க முயன்றுள்ளார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத். யோகிபாபுவின் காமெடி அவ்வப்போது சிரிக்க வைக்கிறது. சுனைனாவை சரியாக பயன்படுத்தவில்லை.!

உதயசங்கரின் ஒளிப்பதிவும், சித்துகுமாரின் பின்னணி இசையும் பார்ப்பவர்களை சற்றே பயமுறுத்துகிறது. ஆனால் திரைக்கதையும், காட்சியமைப்பும் ஏமாற்றுகிறது.

ஆங்கிலப் படங்களை பார்த்தவர்களுக்கு இது நிச்சயமாக பிடிக்காது. அதேசமயத்தில், பார்க்காதவர்களுக்கு ஒரு வேளை பிடிக்கலாம்!