அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிறப்பித்த 15 அதிரடி உத்தரவுகள்!

உலகரங்கில் மிகப்பெரும் செல்வாக்குப் பெற்ற நாடான, அமெரிக்காவின் 46 வது அதிபராக ( ஜோசப். ராபினெட் பைடன் 78 ) நேற்று பதவி ஏற்றார். பதவி ஏற்ற முதல் நாளிலேயே அவர் 15 முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கு முன்னிருந்த அதிபர்கள் யாரும் இவ்வளவு உத்தரவுகளை பிறப்பித்தது இல்லை. ஜோ பைடனின் இந்த செயல். உலகத்தலைவர்களின் மத்தியில் தனிக்கவனத்தை பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ‘கீஸ்டோன் எக்ஸ் எல்’ குழாய் அமைப்புத் திட்டத்தினை எதிர்த்து அமெரிக்க பூர்வகுடி மக்கள் போராடி வருகின்றனர். சர்ச்சைக்குரிய  இந்த திட்டத்துக்கு அளிக்கப்பட்ட  ஒப்புதலை ஜோ பைடன் திரும்பப் பெற்றுள்ளார்.

கொரோனோ தொற்றில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. மேலும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக் கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற நடைபெற்றுவரும் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளது

சில முஸ்லிம் நாடுகள் மீது  விதித்த பயணத் தடைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

.அதிபர் ஜோ பைடனின் இது போன்ற உத்தரவுகளினால், மக்களிடையே அவருக்கு செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.