விமலின் நகைச்சுவை திரைப்படம் ‘தெய்வ மச்சான்’ ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது.

உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர், இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தெய்வ மச்சான்’.

அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் ‘ஆடுகளம்’ நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தெய்வ மச்சான் திரைப்படம் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது.

‘தெய்வ மச்சான்’ கிராமத்து பின்னணியிலான முழு நீள நகைச்சுவை திரைப்படம். யதார்த்தமான ஜாலியான அனைத்து தரப்பு ரசிகர்களும் சிரித்து மகிழக்கூடிய ஜனரஞ்சகமான படமாக இருக்கும். இந்த திரைப்படம் நடிகர் விமலுக்கு ‘விலங்கு’க்குப் பிறகு பெரிய வெற்றி படமாக அமையும், என்கிறார் படத்தின் தயாரிப்பாளர்.