சுசீந்திரன் மூலக்கதையில் வெண்ணிலா கபடிக்குழு -2

கபடி விளையாட்டை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு எல்லா தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்தது. இப்படத்தின் மூலம் விஷ்ணு, புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் அனைவருக்கும் அங்கீகாரம் கிடைத்தது. மீண்டும் சுசீந்திரன் மூலகதையில் செல்வசேகரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடிக்குழு -2 உருவாகியுள்ளது. இப்படத்தில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் கபடி விளையாட்டை பிரமாதமாக படமாக்கியுள்ளார்கள். இந்த படத்தில் கதாநாயகனாக விக்ராந்த், கதாநாயகியாக அர்த்தனா பினு,புரோட்டா சூரி,கிஷோர் , அப்புக்குட்டி, பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

நிஜ கபடி வீரர்களுடன் விளையாடிய கபடி விளையாட்டை தத்ரூபமாக படமாக்கியுள்ளார்கள். கபடி பிரியர்களுக்கு மட்டுமல்ல எல்லா தரப்பினருக்கும் வெண்ணிலா கபடிக்குழு -2 பிடிக்கும். சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை விஜய் சேதுபதி நடித்த கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை, படங்களின் விநியோகஸ்தருமான பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார் .