வெற்றி நடிக்கும் ‘இரவு’ திரைப்படம், இறுதிக்கட்ட த்தை நெருங்கியது!

M10 Productions சார்பில், தயாரிப்பாளர் MS முருகராஜ் தயாரிப்பில் நடிகர் வெற்றி நடித்து வரும் திரைப்படம், ‘இரவு’. இப்படத்தை  பக்ரீத் படப்புகழ் இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கி வருகிறார். இதில் வெற்றிக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்  நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதி கட்டப்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் வெற்றி, இந்தமுறை ‘கோஸ்ட் திரில்லர் டிராமா’ திரைப்படமான ‘இரவு’ படத்தில் நடித்து வருகிறார்.

இரவு படம் குறித்து நடிகர் வெற்றி கூறியதாவது..

‘வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் ஒருவனது  வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள், நேரில் வர ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து  அந்த ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே, இந்தத் திரைப்படம். பல பேய்க்கதைகள் வந்திருந்தாலும், இது வித்தியாசமானதாக இருக்கும். ‘இரவு’  உணர்வுகளை மையமாக கொண்டு, பரபரப்பான திரைக்கதையில், ஒரு திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது. என்றார்.

‘இரவு’ படத்தில் வெற்றி, ஷிவானி நாராயணன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இரவு நேரத்தில் முழுக்க, முழுக்க சென்னை ஈ சி ஆர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில்  வெளியாகவுள்ளது.